சர்ச்சைக்குரிய பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் குறித்த ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்களாக கீழ் கண்டவை முன்வைக்கப்பட்டுள்ளது.
அவையாவன;
* குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளை வழங்குவதற்கு எந்தவிதத்திலும் நான் பின்வாங்க மாட்டேன்.
* பேர்பச்சுவல் நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ள ஆகக்குறைந்த இலாபம் 11,145 மில்லியன் ரூபா.
* பிரதமர் அர்ஜுன மகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
* அர்ஜுன மகேந்திரன் முறைகேடான, தவறான முறையில் தலையீடு.
* ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நடவடிக்கை தேவை.
* ஊழியர் சேமலாப நிதியம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இணைப்பு செய்தி
Update – சர்ச்சைக்குரிய பிணைமுறி குறித்த விசேட அறிவிப்பு இன்று மாலை..
ஜனாதிபதியின் முழுமையான அறிக்கை
பிறந்திருக்கும் 2018 புத்தாண்டானது உங்கள் அனைவருக்கும் சுபீட்சமான வளமான புத்தாண்டாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன், வாழ்த்துகிறேன்.
இந்த நாட்டு மக்களின் முக்கிய கவனம் இன்று திரும்பியிருக்கும் அதேநேரம் கலந்தாலோசிக்கப்படும் அதேபோன்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் ஒரு விடயமாக 2015/16 காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விவகாரம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற புகார்களையும் பொதுமக்களின் கருத்தையும் கவனத்தில் கொண்டு என்னால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை, அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான முன்மொழிவுகள் ஆகியன உள்ளடங்கிய அறிக்கை 2017 டிசம்பர் 30 ஆம் திகதி மேற்குறிப்பிட்ட ஆணைக்குழுவினால் என்னிடம் கையளிக்கப்பட்டது.
2015 பெப்ரவரி முதல் 2016 மார்ச் 31 வரையிலான காலத்திற்கு உட்பட்ட பிணைமுறி வழங்கல் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்ககான அதிகாரமே இவ் ஆணைக்குழுக்கு கிடைக்கப்பெற்றது.
அந்த ஆணைக்குழுவின் பொறுப்புக்களாக
(i) சம்மந்தப்பட்ட விபரங்களை ஆராய்ந்து பார்த்தல்
(ii) திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தீர்மானங்களுக்கு வருவதும் அந்த தீர்மானங்கள் தொடர்பில் முன்மொழிவுகளை முன்வைப்பதுமே ஆகும்.
ஆணைக்குவின் ஆணையாளர்களாக செயற்பட்ட உயர்நீதிமன்ற நீதிவான்களுக்கும் ஆணைக்குழுவின் ஆணையாளராக கடமையாற்றிய அரச கணக்காய்வு திணைக்களத்தின் ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் நாயகம் அவர்களுக்கும் ஆணைக்குழுவின் செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கும் சட்டமா அதிபர், சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், பொலிஸ் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு மற்றும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்ற தகவல்களுக்கு ஒப்பான நிலைமை 2008 ஆண்டிலிருந்து இடம்பெற்று வந்திருப்பதாக ஆணைக்குழு கருதுகின்றது. அவ்விடையங்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு அதாவது 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பில் கணக்காய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென்றும் அதனை இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் அதற்கமைய கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென்றும் ஆணைக்குழு அறிவுறுத்துகிறது.
ஊழியர் சேமலாப நிதியத்தின் (நEPF) நிதியே அக்காலத்தில் அதிகளவில் மோசடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது என ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது.
2015/2016 காலப்பகுதிக்கான ஆணைக்குழுவின் அறிக்கை இடைக்கால அறிக்கை அல்லாது 1257 பக்கங்களைக் கொண்ட முழுமையான அறிக்கையாகும். இப்பணியினை மேற்கொள்வதற்காக அவர்களுக்கு 10 மாத காலத்தை செலவிட வேண்டியிருந்தது.
இந்த அறிக்கையினை ஏற்கனவே நான் சட்டமா அதிபரிடம் கையளித்திருக்கிறேன். எதிர்வரும் காலங்களில் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய குற்றலியல் மற்றும் சிவில் வழக்குகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினாலும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினாலும் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஆணைக்குழுவின் அறிக்கை குறிப்பிடுகின்றது.
மத்திய வங்கியின் கட்டமைப்பு, அரச கடன் திணைக்களம், நேரடி பிணைமுறி வழங்கல்ரூபவ் பிணைமுறி இறைமை மற்றும் பிணைமுறியை ஏலத்தில் விடுதல் ஆகியவற்றின் சாதக பாதக நிலமைகளை தெளிவுபடுத்தி இருக்கின்றது.
அர்ஜுன் மகேந்திரன் அவர்களினதும் வங்கி உத்தியோகத்தினர்களினதும் வெளியிலிருந்து செயற்பட்ட நபர்களினதும் நிறுவனங்களினதும் பங்கேற்புடனும் பேர்பச்சுவல் ரெஸறிஸ் நிறுவனம் சட்டத்திற்கு முரணான வகையில் இலாபத்தை ஈட்டியுள்ளது என்பதை இந்த அறிக்கை கூறுகின்றது.
2015 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் மூலம் பேர்பச்சுவல் நிறுவனம் ஆகக்குறைந்து 688 மில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளது. இத்தொகையானது இந்த விசாரணைக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஈட்டிய இலாபமாக இருப்பதால் இதைவிட கூடுதலான இலாபத்தை இந்நிறுவனம் ஈட்டியிருக்க கூடுமென ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
விசாரணைகளிலிலிருந்து வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இரண்டாம் நிலைச் சந்தையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களின் மூலம் பேர்பச்சுவல் நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ள ஆகக்குறைந்த இலாபம் 11145 மில்லியன் ரூபாவாகும். இதனால் ஊழியர் சேமலாம நிதி உள்ளிட்ட இதனுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நட்டம் 8529 மில்லியன் ரூபா ஆகும். அதாவது 8.5 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் முடிவுகள் தொடர்பில் மத்திய வங்கியின் உயரதிகாரிகள் செயலிழந்த நிலையில் இருந்ததாகவும் அவர்கள் எந்தவித கேள்விகளையும் எழுப்பாது செயலிழந்த நிலையில் இருந்ததால் தவறான முடிவுகளை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகியிருக்கலாமென ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. அத்தோடு அர்ஜுன் மகேந்திரன் அவர்கள் முறைகேடான முறையிலும் தவறான முறையிலும் தீர்மானங்களை மேற்கொண்டு பிணைமுறை ஏலம் தொடர்பான செயற்பாடுகளில் சம்மந்தப்பட்டிருப்பதுடன் உள்ளக தகவல்களை வெளித்தரப்பினருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார் என்பதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு இலாபமீட்டக்கூடிய வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகின்றது.
அர்ஜுன் மகேந்திரனை மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு நியமிப்பது தொடர்பான கௌரவ பிரதமர் அவர்களின் அதிகாரங்கள் முறையானது என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதமர், அர்ஜுன் மகேந்திரன் மற்றும் சமரசிறி ஆகியோர் பற்றியும் அதிலும் குறிப்பாக அர்ஜுன் மகேந்திரன் அவர்கள் கொடுத்த வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து செயற்பட்டிருப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார் என்றும் எனினும் பிரதமர் அவர்கள் அப்படி நடந்திருக்கக் கூடாது எனவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. இந்த விடயங்கள் கோப் விசாரணைக்குழுவின் முன்னிலையிலும் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதும் பிரதமர் அவர்களால் அர்ஜுன் மகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.
அலோசியஸ் குடும்பத்தினருக்கு சொந்தமானரூபவ் அவர்களின் நிர்வாகத்தின் கீழிருந்த வோல்ட் அன் றோ நிறுவனத்தினால் பென்ட் ஹவுஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பென்ட் ஹவுஸ் மாடி வீட்டுக்கு மாதாந்த வாடகை செலுத்தியிருப்பதையிட்டு பொறுப்பேற்க வேண்டியவர் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களே என்பதும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட வேண்டுமெனவும் ஆணைக்குழுவின் முன்னால் பொய் சாட்சியம் அளித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட வேண்டுமெனவும் இவ்வறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதி முறைகேடான விதத்தில் உபயோகப்படுத்தப் பட்டிருப்பதாகவும் இவ்வறிக்கை தெரிவிக்கின்றது. அதன் உண்மையான தொகையை அறிவதற்கு சட்டரீதியான ஆய்வு (தடவியல் தணிக்கை பரிசோதனை Forensic Audit Examination) மேற்கொள்ளப்பட வேண்டுமென இவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தரப்பினரின் செயற்பாடுகள் காரணமாகவே ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதி தவறான முறையில் உபயோகப்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருப்பதாக கூறும் இவ்வறிக்கைரூபவ் சம்பந்தப்பட்ட தரப்பினரை இனங்கண்டிருப்பதுடன் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
தண்டனை பெற்றுக் கொடுப்பதற்காக பேர்பச்சுவல் நிறுவனத்தின் அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிஹேன மற்றும் அறிக்கையில் பொறுப்புக் கூறவேண்டியவர்களாக இனங்காணப் பட்டிருப்பவர்களுக்கு எதிராக குற்றவியல் மற்றும் சிவில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் அரசுக்கு ஏற்பட்ட நட்டத்தினை ஈடுசெய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டுமென்றும் இவ்வறிக்கை பரிந்துரைக்கின்றது. அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
#reeshma