மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் குறித்து முன்னெடுக்கப்பட்ட நீண்ட நாள் விசாரணைக்கு பின் விசாரணையின் இறுதி சுருக்கமான அறிக்கை நாளை மறுதினம்(31) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்க உள்ளதாக பிணை முறி குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.
குறித்த சுருக்கமான அறிக்கை நேற்று(28) கையளிக்க இருந்த நிலையில் அது தோல்வியடைந்துள்ளது. குறித்த அறிக்கையானது ஜனாதிபதியிடம் தேர்தலுக்கு முன்னதாக கையளிக்கப்படுமா என பல்வேறு தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கையில் குறித்த நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், நாளை மறுதினம்(31) நிறைவுக்கு வரவுள்ள சுருக்கமான அறிக்கை தொடர்பில் கால எல்லை நீடிப்பு கோரி நேற்று(28) வரை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவிடமிருந்து எவ்வித கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்ல என ஜனாதிபதி செயலாளர் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.
#G-Reeshma..