சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி மோசடி – ஆணைக்குழு விசாரணைகள் 24 மீண்டும் ஆரம்பம்..

சர்ச்சைக்குரிய இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரங்கள் தொடர்பில் அதிகாரிகளிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மீண்டும் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனிடம் சாட்சிகள் பெற்றுக் கொள்வதற்கு மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தாண்டின் பின்னர் ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

மத்திய வங்கியிலுள்ள இன்னும் இரு அதிகாரிகள் சாட்சிக்காக அழைக்கப்படவுள்ள நிலையில், இவர்களில் ஒருவர் தற்பொழுது வெளிநாடு சென்றுள்ளதனால், முன்னாள் அதிகாரியொருவரிடம் முதலில் சாட்சி விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களிடம் சாட்சிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரன் அழைக்கப்படவுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்படுகின்றது.

 

(rizmira)