சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில் மோதிக்கொண்ட அமைச்சர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளை விரைவுப்படுத்தவில்லை என்பது தொடர்பில் அமைச்சர்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தெடார்பாக சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜுவ சேனசிங்க, சட்டம் மற்றும் சமாதானம், தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னநாயக்க மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த வாரம் அமைச்சரவை அமர்வின் பின்னர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் சிலர் கலந்துக் கொண்ட போது அமைச்சர் சுஜுவ சேனசிங்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போது விசாரணை நடவடிக்கை மேற்கொள்கின்ற சில உயர் பொலிஸ் அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள தவறியுள்ளனர். வேறு ஒரு நபரின் வீட்டில் இவ்வாறு சடலம் மீட்கப்பட்டிருந்தால் பொலிஸாரின் செயற்பாடுகள் இதனை விடவும் வேறு வகையில் காணப்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த இளைஞரின் மரணம் தொடர்பிலான அரச பகுப்பாய்வு அறிக்கை உட்பட தாமதமாகியுள்ளது.

அதேவேளை வீரவன்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போலி கடவுச்சீட்டு குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரையில் வழக்கு தாக்கல் செய்யப்படாமை, கடந்த ராஜபக்ச ஆட்சியில் இடம்பெற்ற தாஜுடீன் கொலை உட்பட ஏனைய குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணை நடவடிக்கை தாமதமாகியமை தொடர்பிலான அனைத்து குற்றச்சாட்டுகளையும், சுஜுவ சேனசிங்க, அமைச்சர் சாகல ரத்நாயக்க மீது சுமத்தியுள்ளார்.

இதன் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க எவ்வித கருத்துக்களையும் வெளியிடாமல் அமைதியாக இருந்த நிலையில், சுஜீவ சேனசிங்க குற்றம் சுமத்தியமை தொடர்பிலேயே தான் கருத்து வெளியிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

விசாரணையை விரைவாக மேற்கொள்ளாமை பிரச்சினைக்குரிய விடயம் என சுஜுவ சேனசிங்க விமர்சித்ததனை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.