தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 04வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று(30) ஆரம்பமாகிறது.
பந்தினை சேதப்படுத்திய குற்றத்திற்காக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் முன்னாள் உபத்தலைவர் டேவிட் வோர்னர், மற்றும் கமரன் பென்ஃக்ராப்ட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 04வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு டிம் பெய்ன் தலைமை தாங்குகிறார். அத்துடன் ஜோ பேர்ன்ஸ் மற்றும் மெட் ரென்சோ ஆகியோர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
தென்னாபிரிக்க அணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எவையும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தென்னாப்பிரிக்காவின் மோர்னி மேர்க்கல் இந்த போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
அத்துடன் இந்த போட்டியுடன் அவுஸ்திரேலியாவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று டெரன் லீமன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.