சர்ச்சையான முறையில் வெற்றி பெற்றதா மேற்கிந்திய தீவுகள் ? (VIDEO)

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிக்கு மேற்கிந்திய தீவுகள் அணி ஏமாற்றி நுழைந்துவிட்டதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

வங்கதேசத்தில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான நேற்றைய போட்டியில் ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 266 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 49வது ஓவரில் 224 ஓட்டங்கள் எடுத்து 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இப்போட்டியில் காலிறுதிக்கு மேற்கிந்திய தீவுகள் அணி ஏமாற்றி சர்ச்சையான முறையில் நுழைந்து விட்டது.

அதாவது ஜிம்பாப்வே விளையாடிக் கொண்டிருந்த கடைசி ஓவரில் வெற்றி பெற மூன்று ஓட்டங்கள் தேவைப்பட்டன, கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது.

அப்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் கீமோ பால் பந்துவீச வந்தார், ஜிம்பாப்வேயின் நாக்ரவா ஓட்டம் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் கிரீசை விட்டு சில அடிகள் தள்ளி நின்று கொண்டிருந்தார்.

இதனை கவனித்த கீமோ, பந்து வீசாமலேயே நாக்ரவாவை ஆட்டமிழக்க செய்தார். பின்னர் நடுவர்கள் விவாதத்திற்கு பிறகு அவுட் என உறுதி செய்யப்பட்டது.

இப்படி சர்ச்சையான முறையில் காலிறுதிக்கு நுழைந்த மேற்கிந்திய தீவுகளை அணியை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

பார்வையிட,