நடிகை அமலாபால் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
நடிகை அமலாபால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அது பற்றி எந்த விமர்சனங்கள் வந்தாலும் கவலைப்படுவது இல்லை. கண்டு கொள்வதும் இல்லை.
இதுதவிர உடலை கட்டுக்கோப்பாக வைப்பதிலும் கவனம் செலுத்துகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் வேட்டி அணிந்தபடி இருந்த அமலாபாலின் புகைப்படம் ஒன்று வைரலானது அதனை தொடர்ந்து புகைப்பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை அமலாபால் சமூக வலைத்தளம் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை குறிப்பிட்டு, புகைப்பிடிப்பதை நான் ஊக்குவிக்கவில்லை, ஒரு ஹாலிவுட் ரசிகையின் கனவாக இந்த புகைப்படத்தை எடுத்துள்ளேன்.
ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் புகைப்பிடிப்பது போன்ற பிரபல காட்சி ஒன்று இருக்கும். அந்த வகையில் இது எனக்கான காட்சி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பாராட்டியும், கண்டனம் தெரிவித்து வருவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
அமலாபால் நடிப்பில் அடுத்ததாக ’அதோ அந்த பறவை போல’ வெளியாக உள்ளது.
