(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலஞ்ச, ஊழல் மோசடிகள், குற்றச் செயல்களை ஒழிப்பதற்காக சர்வகட்சிச் சபையொன்றை அமைத்து அதனை ஜனாதிபதி செயலணியுடன் இணைத்து இயங்க வைக்கத் திட்டமிட்டுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வர்த்தக சமூகத்திடம் தெரிவித்துள்ளார்.
நேற்று(18) இடம்பெற்ற வர்த்தக சமூகப் பிரதிநிதிகளுடனான இரண்டு மணி நேர சந்திப்பின்போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்;
“எனக்கு எந்தத் தரப்பினருடனும் முரண்பாடு கிடையாது. நாட்டை சரியான திசையில் கட்டியெழுப்புவதே எனது பிரதான இலக்காகும். நான் எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணியப் போவதில்லை. எனக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.