சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபயவிற்கு விருப்பமில்லை: மைத்திரி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அனைவரது கோரிக்கையாக இருக்கும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரும்பவில்லையென தன்னிடம் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான எதிர்க்கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.