சர்வதேச அங்கீகாரத்தை பலவீனப்படுத்தாதீர்கள் : அமெரிக்கா இலங்கைக்கு மீண்டும் வலியுறுத்தல்…

அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஹீதர் நவேர்ட் வலியுறுத்தி தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதவில் தெரிவிக்கப்படுவதாவது;

“அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாங்கள் கோருகிறோம்.
பாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமடைவது, இலங்கையில் நிச்சயமற்ற நிலை மேலும் தீவிரமடைவதுடன், அதன் அனைத்துலக மதிப்பையும் பாதிக்கும். அத்துடன், நல்லாட்சி, உறுதித்தன்மை, பொருளாதார வளர்ச்சி குறித்த இலங்கை மக்களின் அபிலாசைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.