எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 -17 ஆம் திகதி வரை ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் சர்வதேச உணவு மற்றும் குடிபானக் கண்காட்சியொன்று இடம்பெறவுள்ளது.
பிரதியாண்டும் இடம்பெறும் இப்பாரிய கண்காட்சியில் பெருமளவு நாடுகள் கலந்து கொள்கின்றன.
இலங்கை ஏற்றுமதிச்சபை இக்கண்காட்சியில் இலங்கைக்கான காட்சிக் கூடமொன்றை ஒழுங்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேயிலை மற்றும் ஏனைய குடிபானம்,பழ வகைகள், மரக்கறிகள், இனிப்பு மற்றும் வெதுப்பக உற்பத்திகள் தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகள், கால்நடை உற்பத்திகள், சிறுவர்களுக்கான உணவுகள், சுகாதார சேதன உற்பத்திகள், போன்ற பொருட்கள் இக்கூடத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையால் தெரிவு செய்யப்பட்ட உற்பத்தியாளர்களும் ஏற்றுமதியாளர்களும் கலந்து கொள்ளவுள்ள இக்கண்காட்சிக்கான ஒரு பகுதி செலவுகளையும், கலந்து கொள்வோரின் செலவுகளையும் தாமே ஏற்றுக்கொள்ளவுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபைத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.