சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து யூனிஸ்கான் ஓய்வு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான யூனிஸ்கான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் சரியாக விளையாடாததால் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட யூனிஸ்கான், பின்னர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்க்கப்பட்டார்.

இதனால் தெரிவுக் குழு மீது கடும் விமர்சனம் எழுந்தது. இதனால் இங்கிலாந்து தொடரின் மத்தியில் அவர் ஓய்வு அறிவிப்பார் என்று கூறப்பட்டது.

இந்த தொடரில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த முதல் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் யூனிஸ்கான்.

தற்போது 37வயதாகும்  அவர் 265 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 சதம், 48 அரைசதம் உட்பட 7240 ஓட்டங்களை குவித்துள்ளார்.