ஸ்மித் விலகல் – சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக மாற்று வீரர்

(FASTNEWS|COLOMBO ) – லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் ஜொப்ரா ஆர்ச்சரின் பௌன்சர் பந்து தாக்கியதில் ஸ்டீவ் ஸ்மித்தின் கழுத்து பகுதியை பலமாக தாக்கியதால் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

தற்போதுள்ள விதிப்படி ஒரு வீரர் மூளையளர்ச்சியால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மாற்று வீரர் களம் இறங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஸ்மித்திற்குப் பதிலாக மாற்று வீரராக சகலத்துறை ஆட்டக்காரர் மார்னஸ் லபுஸ்சன் களம் இணைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறை மாற்று வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 1 ஆம் திகதி அமுலுக்கு வந்த புதிய விதிகளின்படி, லபுஸ்சன் ஒரு மாற்று வீரராக இருந்தபோதும் அவரால் பந்துவீச மற்றும் துடுப்பெடுத்தாட அனுமதி அளிக்கப்படுகிறது.

ஜொப்ரா ஆர்ச்சரின் பௌன்சர் பந்து தாக்கியதில் மூளையில் அதிர்வு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் விலகிக் கொண்டுள்ளார்.