சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சேவாக் ஓய்வு?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெளியான தகவலை வீரேந்திர சேவாக் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே விளையாடக் கூடிய மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் டி20 போட்டி அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. துபையில், நடைபெற்ற இதற்கான அறிமுக விழாவில் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி வீரேந்திர சேவாக் அறிவிப்பு வெளியிட்டதாக தகவல்கள் வெளியாயின.

ஆனால், இந்த தகவல்களில் உண்மையல்ல என்றும், தாம் கூறிய கருத்தை ஊடகங்கள் தவறுதலாக புரிந்து கொண்டதாகவும் சேவாக் விளக்கம் அளித்துள்ளார். இதனை ஹரியானா கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர அனிரூத் சவுத்ரியும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மொத்தம் 104 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள சேவாக், 23 சதங்கள், 32 அரைசதங்களுடன் 8,586 ரன்கள் குவித்துள்ளார். 251 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8,273 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.