சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டி வில்லியர்ஸ் ஓய்வு…

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஏ.பீ. டி வில்லியர்ஸ் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

தனது ஓய்வு குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த வில்லியர்ஸ்;

“நான் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளேன். ஓய்வுக்கான சரியான நேரம் இது. இதனால் மற்ற வீரர்களுக்கான இடம் கிடைக்கும். உண்மையை சொல்லப்போனால். நான் சோர்வாகிவிட்டேன். இது ஒரு கடினமான முடிவு தான். என்றாலும், நீண்ட காலமாக சிந்தித்து முடிவு எடுத்தது தான்.

இத்தனை ஆண்டுகள் எனக்கு ஆதரவு கொடுத்த கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா, அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். இவர்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை. சர்வதேச போட்டியில் இனி நான் இடம் பெற வாய்ப்பில்லை. உள்ளூர் போட்டிகளில் களமிறங்குவேன். பாப் டு பிளேஸிஸுக்கும், அணியினருக்கும் என்னுடைய முழு ஆதரவு உள்ளது” என்றார்.

இவர், தனது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 T-20 போட்டிகளில் விளையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.