பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம் (BMICH), அதன் வர்த்தக தரம் மற்றும் செயற்பாடுகளுக்காக இம்மாதம் இடம்பெறவுள்ள சென்சரி சர்வதேச தர ERA(CQE) விருதுகள் வழங்கும் நிகழ்வில் தங்கப் பிரிவில் விருதை வென்று சர்வதேச கௌரவத்தை பெற்றுக் கொள்ளவுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மிகச்சிறந்த கம்பனிகள், நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களின் QC100 TQM மாதிரிக்கான அர்ப்பணிப்பை கௌரவப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட BID மாநாட்டின்(வர்த்தக முயற்சி திசைகள்) வருடாந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமான, 18ஆம் நூற்றாண்டு சர்வதேச தர ERA விருதுகள் 2016 இல் இந்த பெருமைக்குரிய விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
இந்த போட்டியில் பல்வேறு நிலைகளில் BMICH மதிப்பீடு செய்யப்பட்டு பிரகாசித்துள்ளது. BMICH வளாகமானது தலைமைத்துவம் மற்றும் வர்த்தக முகாமைத்துவம், தரம் மற்றும் ஒட்டுமொத்த செயற்திறன், வர்த்தகம் மற்றும் வர்த்தக குறியீட்டு பெருமை, தொழில்நுட்பம், புதுமை மற்றும் வளர்ச்சி போன்ற பிரிவுகளில் அதன் செயற்திறனை வெளிப்படுத்தியிருந்தது.
´BMICH வளாகமானது பிரதான செயல்பாடு மற்றும் QC 100 மொத்த தர மேலாண்மை கருப்பொருள் போன்றவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது. நூற்றாண்டு தங்க விருதை வென்றமையானது, எமது செயல்பாடுகள் அனைத்திலும் உள்ள குறைந்த செலவு மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றுக்கான எமது அர்ப்பணிப்பு மற்றும் செயற்திறன் போன்றவற்றை சான்று பகர்வதாக அமைந்துள்ளது.
தரம் மற்றும் நிறுவனசார் செயற்திறனில் முன்னணி வழங்குநர் BMICH என்பதை உறுதி செய்வதாக இவ் விருது காணப்படுகிறது´ என பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சுனில் திசாநாயக்க தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கண்டங்களுக்கிடையேயான ஜெனிவா மாநாட்டு நிலையத்தில் இடம்பெறவுள்ள இந்த மாபெரும் விருதுகள் வழங்கும் நிகழ்வில் வெவ்வேறு வர்த்தக பிரிவுகளை சேர்ந்த தலைவர்கள், பொருளாதாரம், கலை, தர நிபுணத்துவம், கல்விமான்கள் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிகழ்வில் BMICH சார்பாக திசாநாயக்க விருதை பெற்றுக்கொள்ளவுள்ளார்.
´வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கிவரும் எமது குழுவினரின் தொடர்ச்சியான கடின உழைப்பு இவ்விருது மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்கான இலங்கையின் முதல்தர இடமாக BMICH மீண்டும் ஒருதடவை தம்மை உறுதி செய்துள்ளது´ என திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
´இந்த அங்கீகாரமானது, எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை உற்பத்திகள் ஊடாக பூர்த்தி செய்து மதிப்பு சேர்ப்பதற்கும், எமது நிபுணத்துவ குழுவினரால் தரமான சேவை, நெகிழ்வான இடவசதிகள் மற்றும் உலகத்தரமான உணவு போன்றவற்றை வழங்குவதில் எமக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்துவதற்கான ஓர் உந்துதலாக அமைந்துள்ளது´ என திசாநாயக்க குறிப்பிட்டார்.