சர்வதேச பாடசாலைகளின் செயற்பாடுகளை தரப்படுத்தும் நோக்கில், சுயாதீன மீளாய்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நேற்று(07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அடிப்படை தகுதி இருக்குமாயின், யாரும் எந்த ஒரு பரீட்சைக்கும் தோற்றுவதற்கு தடையில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.