தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள சர்வதேச பிடியாணையை மீளப்பெறுமாறு கோரி ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க அடிப்படை உரிமை மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.
வீரதுங்கவை கைது செய்யும் வகையில் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் பொலிஸார் பிடியாணை உத்தரவை பெற்றிருந்தனர்.
ஸ்ரீலங்கா விமானப் படைக்கான ஏழு மிக் 27 ரக விமானக் கொள்வனவின் போது இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக குறித்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
உதயங்க, தனது மாமியாரான லதா இந்திராணி ஊடாக இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன் மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வு பிரிவு பணிப்பாளரால் தமது வங்கி கணக்குகள் இடைநிறுத்தப்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் மேலும் கோரியுள்ளார்.