இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார, இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என புகழ்ந்துள்ளார்.
இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி, கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக துடுப்பாட்டம் செய்து வருகிறார். டெஸ்டில் 25 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 39 சதங்களும் விளாசி அனைத்து வித கிரிக்கெட்டிலும் சிறந்த துடுப்பாட்ட வீரராக விளங்கி வருகின்றமை யாவரும் அறிந்ததே.
இது தொடர்பில் குமார் சங்கக்கார கருத்துத் தெரிவிக்கையில்;
‘உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோஹ்லி திகழ்கிறார். அவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் மிகவும் அபாரமாக விளையாடி நம்ப முடியாத வகையில் ஓட்டங்களை குவிக்கிறார். கிரிக்கெட்டின் அனைத்து காலக்கட்டத்திற்கும் சிறந்த துடுப்பாட்ட வீரராக இருக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் சங்ககாரா 63 சதங்களை விளாசிய நிலையில், கோஹ்லி 64 சதங்கள் அடித்துள்ளார். எனினும் கோஹ்லியை, சங்கக்கார புகழ்ந்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(iFA)