இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் வீரர் சல்மான் பட்டை இணைத்துக் கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முயற்சிகளை எடுத்து வருகிறது.
2010ம் ஆண்டு லோட்ஸில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் சல்மான் பட் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டிருந்தார்.
இதனை அடுத்து அவருக்கு 30 மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் அவர் 7 மாதங்களே சிறையில் இருந்த நிலையில், பிரித்தானியாவின் முன்கூட்டிய விடுவிப்பு திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்டு, பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட்டார்.
இதன்படி அவர் 10 வருடங்களுக்கு பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்க முடியாது.
இந்த சம்பவம் இடம்பெற்று ஆறு வருடங்களே ஆகியுள்ள நிலையில், சல்மன் பட்டை இணைத்துக் கொள்ளும் பாகிஸ்தானிய கிரிக்கெட் சபையின் முயற்சி வெற்றியளிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.