சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் இத்தாலிய வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர், போலோ ஜெந்தலோனை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியதாக சவுதி செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பல்வேறு வழிகளிலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆராயப் பட்டதுடன், பிராந்திய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.