பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாக உணவு, துணிகள், மின்னணு உபகரணங்கள் உட்பட பல்வேறு அம்சங்களில் மதிப்பு கூட்டு (வற்) வரியை சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரக அரசுகள் நேற்று(01) முதல் அமுல்படுத்தியுள்ளது.
எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரக அரசுகளின் வருமானத்தின் பெரும் பகுதி எண்ணெய் ஏற்றுமதி மூலமாக வருகிறது. வருமான வரி மற்றும் பொருட்களின் மீதான வரிகள் மேற்கண்ட நாடுகளில் இல்லாத நிலை இத்தனை காலமும் இருந்து வந்தது.
இந்நிலையில், பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாக உணவுப்பொருட்கள், துணிகள், மின்னணு உபகரணங்கள், தொலைபேசி கட்டணம், தண்ணீர் மற்றும் மின்சார கட்டணங்கள், விடுதி பதிவு ஆகியவற்றுக்கு 5 சதவிகிதம் அளவுக்கு வற் வரி நேற்று(01) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இந்த வரிவிதிப்பில் இருந்தது நிதி சேவைகள், பொது போக்குவரத்து மற்றும் மருத்துவ பொருட்கள் ஆகியவற்றில் வற் வரி விதிப்பில் இருந்தது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வற் வரி மூலம் இந்த ஆண்டில் 3.3 மில்லியன் அமெரிக்க டாலர் கூடுதல் வருமானம் கிடைக்கும் என ஐக்கிய அமீரகம் தெரிவித்துள்ளது.
மேலும், சவுதியில் புகையிலை பொருட்கள், குளிர்பாணங்கள் ஆகியவை இந்த வரி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய அமீரகத்தில் சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதோடு, சுற்றுலா வரிகளும் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், வருமான வரி வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.