சவூதியின் பொரு­ளா­தா­ரத்தை நவீ­னப்­ப­டுத்த அரசு திட்­­டம்

சவூதி அரே­பி­யாவின் பொரு­ளா­தா­ரத்தை நவீ­னப்­ப­டுத்தி விரி­வு­ப­டுத்த முன்­வைக்­கப்­பட்ட திட்­டத்­துக்கு அரசு ஒப்­புதல் அளித்­துள்­ளது. அடுத்த 15 ஆண்­டு­களில், எண்ணெய் பொரு­ளா­தா­ரத்தை மட்­டுமே நாடு சார்ந்­தி­ருக்கும் நிலையை குறிப்­பி­டத்­தக்க அள­வுக்கு குறைக்க புதிய திட்டம் வகுத்­துள்­ளது.

வரி­களை அதி­க­ரித்து, அரச செல­வி­னங்­களைக் குறைக்க அரசு விரும்­பு­கி­றது. அதே சமயம் தனியார் வர்த்­த­கத்­துக்கு பெரிய பங்கை அளிக்­கவும் புதிய பொரு­ளா­தாரக் கொள்கை எண்­ணி­யுள்­ளது.

அரசால் ஒப்­புதல் அளிக்­கப்­பட்­டுள்ள புதிய பொரு­ளா­தாரக் கொள்­கை­யின்­படி உல­கெங்கும் முத­லீடு செய்யும் நோக்கில் இரண்டு ட்ரில்­லியன் டொலர் நிதியம் உரு­வாக்­கப்­படும்.

அரச எண்ணெய் நிறு­வ­ன­மான அராம்­கோவின் பங்­கு­களை விற்று அதன் மூலம் வரும் நிதியைக் கொண்டு இந்த நிதி­யத்­துக்கு தேவை­யான ஆதா­ரங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

எனினும் முதல் கட்­ட­மாக அராம்­கோவின் 5 சத­வீத பங்­கு­களை மட்­டுமே விற்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. எண்ணெய் நிறு­வ­னத்தின் பங்­கு­களை விற்க அந்­நாட்டின் பட்­டத்து இள­வ­ரசர் முஹம்­மது பின் சல்மான்  முடிவு செய்­துள்ளார்.

தற்­போது உலகின் பணக்­கார நாடு­களின் பட்­டி­யலில் 19ஆவது இடத்தில் உள்ள சவூதி அரே­பி­யாவை விரைவில் 15ஆவது இடத்­துக்கு கொண்டு வரு­வ­தற்­கான பல்­வேறு பொரு­ளா­தார சீர்­தி­ருத்த திட்­டங்கள் கொண்ட கையேட்டை வெளி­யிட்ட அவர் உள்­நாட்டு இரா­ணுவ செல­வி­னங்­களும் வெகு­வாக குறைக்­கப்­படும் என தெரி­வித்­துள்ளார்.