சவூதி அமெரிக்கா தூதரகம் அருகே தற்கொலை படைத்தாக்குதல்

சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலை படை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

அமெரிக்க தூதரம் அருகே சென்ற மர்மநபர் ஒருவரை பொலிஸார் விசாரித்தபோது, குறித்த நபர் தனது உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும், இதில் குண்டுதாரி உடல் சிதறி உயிரிழந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தில் மேலும் இரு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று அமெரிக்க சுதந்திர தினம் என்பதால், அதனை கொண்டாட  தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்து வந்தநிலையில், அதனை முறியடிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக்கத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை குறித்த தூதரகத்தில் கடந்த 2004ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.