சவூதி அரேபிய முன்னாள் வெளியுறவு மந்திரி இளவரசர் சவுத் அல் பைசல் காலமானார்

முன்னாள் வெளியுறவு மந்திரியும் சவூதி அரேபியாவின் இளவரசருமான சவுத் அல் பைசல் நேற்று அமெரிக்காவில் காலமானார்.

வெளியுறவுத் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் சவுத் அல் பைசல். 1975 ஆம் ஆண்டு முதல் முறையாக வெளிநாட்டு தூதரக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் மந்திரியான அவர் 2015-ல் உடல் நிலைக் காரணங்களுக்காக  பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் வயோதிகம் காரணமாக தனது 75-வது வயதில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மரணமடைந்தார். இவர் மரணத்திற்கு அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துள்ளார்.

(riz)