சவூதி அரேபியாவில் அந்நாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக குறித்த இளவரசர், அவரது தோழர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றமைக்காக குறித்த இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
Turki bin Saud al-Kabir என்ற இளவரசருக்கு சவூதியின் தலைநகர் ரியாத்தில் இவ்வாறு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இளவரசரின் தண்டனையுடன், இந்த ஆண்டில் இதுவரையில் 134 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.