சஷி வீரவங்சவின் வழக்கிற்கு தேவையான சான்றுகளை காணவில்லை..

சஷி வீரவன்சவின் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் போது காணமால் போனமை சம்பந்தமாக உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு சட்ட மா அதிபர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

சட்ட மா அதிபர் சார்பாக மன்றில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல், திலிப பீரிஸ் குறித்த இந்த கோரிக்கையை முன் வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

போலி ஆவணங்களை சமர்பித்து கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ளப்பட்ட குற்றம் சுமத்தப்பட்டுள்ள சசி வீரவன்சவிடம் இருந்த கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக மேலும் கூறப்பட்டுள்ளது.

 

(rizmira)