போலி ஆவணங்களைக் கொண்டு கடவுச் சீட்டு தயாரித்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் மனைவி, சஷி வீரவன்சவிற்கு எதிரான வழக்கை விசாரணை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.
அது தொடர்பான வழக்கு இன்று(25) விசாரணைக்கு வந்த போது, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 08ம் திகதி விசாரிக்கப்படும் என்று கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அறிவித்தார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சசி வீரவன்சவிற்கு எதிரான இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் இன்றைய விசாரணையின் போது, சாட்சியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணை தினமான பெப்ரவரி மாதம் 08ம் திகதியன்று சாட்சியாளர்கள் நீதிமன்றில் ஆஜராக நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.