(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தீவிரவாதத்தை பரப்பிய சஹ்ரான் ஹாஷிமுக்கு உதவியதுடன் அவருக்கு 2017 ஆம் ஆண்டு முதல் அடைக்கலம் கொடுத்து உதவினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அம்பாறை- ஒலுவில் திருமண பதிவாளர் (வயது 55), பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன உறுதிப்படுத்தினார்.
இவர், சஹ்ரானின் பிரிவினைவாதத்துக்கு ஒத்துழைப்பு நல்கியதுடன், அவர் உள்ளிட்ட ஐவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார்.
சஹ்ரான் உள்ளிட்ட ஐவர், காத்தான்குடி அலியார் பிரதேசத்தில், 2017ஆம் ஆண்டு மற்றுமொரு தரப்பினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அந்த குழுவினர், சஹ்ரானின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிரானவர்கள் என தெரியவருகின்றது.