சாட்சியங்கள் இன்றி முடிவுக்கு வந்த கொடகனந்த கொலை

2012ம் ஆண்டு கொடகனந்த பகுதியில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேகநபர்கள் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கொலை இன்று வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிபதி தேவிகா தென்னகோன் இந்த தீர்ப்பை அறிவித்தார்.

பிரதான சாட்சியாளரின் வாக்குமூலங்களில் பல பரஸ்பரங்கள் காணப்படுவதாகவும் சாட்சிகள் நம்பிக்கைக்குரியதல்ல என்றும் நீதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

நீதிபதி தேவிகா தென்னகோன், பிரதிவாதிகளை குற்றவாளிகளாக அறிவிக்க முடியாது எனக் கூறியே சந்தேகநபர்கள் மூவரையும் விடுதலை செய்யத் தீர்ப்பளித்தார்.