சாதனைகளை குவிக்கும் செரீனாவுக்கு புதிய சாதனை

சர்வதேச டெனிசில் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வரும் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஆகிய மூன்று பட்டங்களையும் தொடர்ந்து வென்று சாதனை படைத்தார். 33 வயதான செரீனா முதலிடத்தில் நீடிப்பதுடன் தரவரிசையில் 13,161 புள்ளிகளை பெற்றுள்ளார் என்பதும் சாதனையே.

அவருக்கு அடுத்து 2-வது இடத்தில் இருக்கும் ரஷியாவின் மரியா ஷரபோவா 6,490 புள்ளிகளை பெற்றுள்ளார். இருவருக்கும் இடையே 6,671 புள்ளிகள் வித்தியாசமாகும். சர்வதேச டெனிஸ் சங்கம் 1975-ம் ஆண்டு கம்யூட்டர் தரவரிசை முறையை அறிமுகம் செய்தது. அதில் இருந்து முதலிட வீராங்கனை ஒருவர், 2-வது இடத்தில் இருக்கும் வீராங்கனையை விட ஒரு மடங்கு அதிகமாக புள்ளிகள் பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த புதிய சாதனைக்கும் செரீனா சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

(riz)