சாதாரணதரப் பரீட்சைக்கு முன்னர், செயன்முறை பரீட்சை…

இந்த வருடம் முதல் க.பொ. த சாதாரணதரப் பரீட்சைக்கு முன்னர், செயன்முறை பரீட்சைகளை நடாத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் இந்த செயன்முறைப் பரீட்சைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

இந்தச் செயன்முறை பரீட்சைகளுக்கான அனுமதிப்பத்திரம் எதிர்வரும் நாட்களில் தபால் மூலம் அனுப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.