சாதாரணதரப் பரீட்சையின் 2ஆம் கட்ட மதிப்பீட்டு பணிகள் நாளை(08) முதல்…

கல்விப்பொதுத்தரதர சாதாரணதரப் பரீட்சையின் 2ஆம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக, 4 பாடசாலைகள் நாளை(08) முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு இசிப்பத்தன கல்லூரி, மாத்தறை மஹானாம மகா வித்தியாலயம், களுத்துறை சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கர கல்லூரி, கண்டி புனித அந்தோனியார் மகளிர் பாடசாலை ஆகிய பாடசாலைகள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக மூடப்படவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 21 பாடசாலைகளில் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெறவுள்ளதுடன், பாடசாலைகளின் ஒரு பகுதி மாத்திரம் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

அதேவேளை, தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15 ஆம் திகதி, தமிழ்மொழி மூலமான மத்திய நிலையங்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.