சாதாரண தரப்பரீட்சையில் மோசடி செய்த மாணவர்கள் தொடர்பில் விசாரணை…

2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் மோசடி செய்த 969 மாணவர்கள் தொடர்பில், தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை மோசடியில் , 2194 மாணவர்கள் ஈடுபட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார். இவர்களில் 969 மாணவர்களின் பெறுபேறுகளை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், குறித்த மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்குள் மோசடியில் ஈடுபட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.