சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின – அகில இலங்கை ரீதியில் ஆறு முதலிடங்கள்…

2017 ஆம் ஆண்டுடிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு(28)  வௌியிடப்பட்டுள்ளன.

www.doenets.lk என்ற இணையத்தள முகவரியூடாக பெறுபேறுகளை அறிந்துக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று வௌியாகிய பெறுபேறுகளுக்கு அமைய 6 மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

கம்பஹா ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கசுனி ஹங்சனா தத்சரனி செனவிரத்ன, அதே பாடசாலையைச் சேர்ந்த சமோதி ரவீசா சுபசிங்க மற்றும் கண்டி மகளிர் உயர் பாடசாலையை சேர்ந்த நவோத்யா ரணசிங்க மற்றும்  கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலையை சேர்ந்த லிமாஷா அமந்நி விமலவீர மற்றும் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தை சேர்ந்த ரன்தி லக்பிரியா மற்றும் இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த கவீஷ பிரீத்திசாத் ஆகியோரும் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் மாணவர்கள் மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகள் ஏப்ரல் மாதம் 7ம் திகதிக்கு முன்னரும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் 12ம் திகதிக்கு முன்னரும் விண்ணப்பிக்க முடியும்.

பரீட்சை பெறுபேறுகள் சம்பந்தமாக தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் 0112 78 42 08 / 0112 78 45 37 / 0113 188 350 என்ற இலக்கங்களுக்கோ அல்லது 0113 140 314 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.