சாதாரண தரப் பரீட்சைக்கு விசேட பாதுகாப்பு…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று(03) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், குறித்த பரீட்சைகள் இடம்பெறும் 4,661 பரீட்சை நிலையங்களிலும், விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இம்முறை 656,641 மாணவர்கள் தோற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.