நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில், பரீட்சாத்திக்கு பதிலாக ஆள் மாறாட்டம் செய்து பரீட்சை எழுதினார் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் நேற்று(04) தமிழ் மொழியும் இலக்கியமும் பாடத்திற்கு, பரீட்சாத்திக்கு பதிலாக இவர் பரீட்சை எழுத முற்பட்ட வேளையில் பரீட்சை நிலைய அதிகாரியினால் சந்தேகிக்கப்பட்ட நிலையில் இனங்காணப்பட்டதாகும் பின்னர் கைது செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பரீட்சை திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.