(FASTNEWS|COLOMBO) 2018 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு(28) வெளியாகின.
சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரம் பின்வருமாறு.
முதலாம் இடம் – கொழும்பு விசாகா மகளிர் கல்லூரியை சேர்ந்த நிலன்க திசிவாரி வருசவிதான.
இரண்டாம் இடத்தினை மூன்று மாணவர்கள் பெற்றுள்ளனர்.
- கொழும்பு விசாக மகளிர் கல்லூரியை சேர்ந்த கரசின்க ஆராச்சிகே சவிதி ஹன்சதி
- கம்பஹா ரத்னவலி மகளிர் கல்லூரியின் சஞ்சனி திலேகா குமாரி
- மாத்தறை சுஜாதா ராஹூல வித்தியாலத்தின் களுஆராச்சிகே கன்கனம்கே மினிதி ரெபேகா
71.66 சதவீதமானோர் கல்விப் பொதுத்தராதர உயர் தரத்தை தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளதுடன், இதில் 9, 413 மாணவர்கள் 09 பாடங்களிலும் “ஏ” சித்திகளை பெற்றுள்ளனர்.
இதேவேளை, பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேலதிக விபரங்களை http://www.doenets.lk இணையத்தில் சுட்டெண் அடிப்படையில் பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.