சாம்பியன்ஸ் கிண்ண தோல்வியின் நச்சரிப்பே இலங்கை அணியின் பயிற்சியாளர் கிரஹாம் விலகக் காரணம்…

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரஹாம் போர்டு சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் கிண்ணத்தை வெல்ல முடியாமல் இலங்கை அணி தோற்று வெளியேறியது.

இதையடுத்து, தோல்விக்கு பொறுப்பேற்று அந்த அணியின் பயிற்சியாளர் கிரஹாம் போர்டு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 15 மாதங்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக போர்டு இருந்து வருகிறார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவரான போர்டின் பயிற்சியின் கீழ் இலங்கை அணி அவுஸ்ரேலியாவை 3-0 என படுதோல்வி அடையச் செய்தது.

ஆனால், பின்னர் தொடர்ந்து தோல்விகளையே இலங்கை அணி சந்தித்து வருகிறது. 2016ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் டி20 உலகக் கிண்ண தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறியது.

மேலும், வங்கதேச அணியுடன் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)