சாம்பியன்ஸ் கிண்ண முதல் போட்டியில் சுருண்டது பங்களாதேஷ் அணி..

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று(01) இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் தமிம் இக்பால் 128 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 47.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 308 ஓட்டங்களை பெற்று வெற்றி கண்டது.

இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் (Joe Root) ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

இதேவேளை, இன்று(02) இடம்பெறவுள்ள போட்டியில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)