சாம்பியன்ஸ் போட்டிக்கு செல்ல முன்னர் மேத்யூஸ் இறுதி திட்டத்தினை வெளியிட்டார்..

இங்கிலாந்து மண்ணில் பிரகாசிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தாம் இங்கிலாந்து சென்று 12 -14 நாட்கள் வரை பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாகவும், அதன் ஊடாக சிறப்பாக விளையாட முடியும் என நம்புவதாகவும் அஞ்சலோ மெத்யூஸ் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று(18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சாம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் இன்று(19) காலை இங்கிலாந்து நோக்கிப் பயணமாகியமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)