(FASTNEWS|COLOMBO) கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் உயிரிழந்த 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் 6 ஆண்கள், 6 சிறுவர்கள் மற்றும் 3 பெண்களின் சடலங்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.