மலேசிய பிரதமரின் இலங்கை விஜயம் காரணமாக காலி முகத்திடல் சுற்றுவட்டம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தை சுற்றியுள்ள வீதிகள் சில தற்காலிகமாக மூடப்படவுள்ளன.
காலை 8.15 தொடக்கம் 10 மணி வரை காலி முகத்திடல் சுற்றுவட்டம் மற்றும் பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் ஆகிய வீதிகள் 15 நிமிடங்களுக்கு மூடப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த நேரங்களில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகள் மற்றும் பொதுமக்களை பொலிசார் கோரியுள்ளனர்.