பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய களனி பாலத்தின் கட்டுமானப்பணிகளுக்காக, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக சாலையின் களனி பாலத்திற்கு அருகில் களனி மற்றும் வத்தளை பகுதிகளில் வாகனங்கள் வௌியேறுவதற்காக பயன்படுத்தப்படும் வீதியை இம்மாதம் 10ம் திகதி முதல் மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலாக மாற்றுவீதிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி , கட்டுநாயக்க அதிவேக வீதியில் இருந்து களனி மற்றும் பெஹலியகொடை நோக்கி பயணிப்பதற்காக பெஹலியகொடை வௌியேறும் பகுதியில் இருந்து கண்டி கொழும்பு வீதிக்கு பிரவேசிக்க முடியும்.
அதேபோல், கட்டுநாயக்க அதிவேக வீதியில் இருந்து வத்தளை மற்றும் பெஹலியகொடை நோக்கி பயணிப்பதற்காக பெஹலியகொடை வௌியேறும் பகுதியின் ஊடாக கொழும்பு – நீர்க்கொழும்பு வீதிக்கு பிரவேசிக்க முடியும்.
மற்றும், கட்டுநாயக்க அதிவேக வீதியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் வழமைப்போல் பயணிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.