சாரதி அனுமதிப் பத்திரம் – புதிய முறையில் எழுத்து மூலப் பரீட்சை…

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான எழுத்து மூலப் பரீட்சையை புதிய முறையில் நடத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

எழுத்து மூலப் பரீட்சையில் இடம்பெறுகின்ற மோசடிகளை தடுத்தல் மற்றும் விரைவாக பெறுபேறுகளை வௌியிடுவது போன்ற காரணங்களுக்காக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி கூறியுள்ளார்.

அதன்படி முதலில் வெஹரஹர காரியாலயத்தில் புதிய முறையில் எழுத்து மூலப் பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் வாகன பதிவுகள் அதிகரித்திருப்பதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியினுள் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 334 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.