சாலாவ மக்கள் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்துக்கு தயார்..

கொஸ்கம சாலாவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்புச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட 2100 குடும்பங்களைச் சேர்ந்த எவருக்கும் இதுவரையில் முறையான தீர்வு கிடைக்காமையினால், இன்றையதினம்(17) கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்துக்கு அருகில், பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த அவ்விபத்தில் பாதிக்கப்பட்டோர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு செவிசாய்த்து தீர்வு வழங்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்காதுவிடின், சாலாவ நகரில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அச்சங்கத்தின் ஏற்பாட்டாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 06 ஆம் திகதி இடம்பெற்ற இவ்விபத்துச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நஷ்டஈடு தருவதாக வாக்குறுதிகள் அளித்திருந்தும் இதுவரையில் அவை நிறைவேற்றப்படாதுள்ளதாகவும், வாக்குறுதியை நிறைவேற்றாது 5 மாதங்களும் 5 நாட்கள் கழிந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.