சாலாவ மக்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் – லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டது

கொழும்பு காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதியான லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாகவே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சாலாவ ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.