சாவித்திரியை தொடர்ந்து ஜெயலலிதா – கீர்த்தி சுரேஷ்?

சாவித்திரி படத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் காமராஜர் வாழ்க்கை ஏற்கனவே சினிமா படமாக தயாராகி வெளிவந்தது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்க்கையும் இப்போது படமாகி வருகிறது. அடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கான திரைக்கதை, நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேசை அணுகி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மறைந்த நடிகை சாவித்திரி வேடத்தில் அவர் நடித்துள்ள ‘நடிகையர் திலகம்’ படம் திரைக்கு வந்துள்ளது.

இதில் கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்து இருப்பதாகவும் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக அவர் பொருந்தி இருப்பதாகவும் பாராட்டுகள் குவிகின்றன.