பெங்களூரில் சிகரட் துண்டால் ஏற்பட்ட தீ விபத்தில் 300-இற்கும் அதிகமான கார்கள் எரிந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பெங்களூரின் ஏலகங்கா பகுதியில் விமான கண்காட்சியொன்று இடம்பெற்று வருகின்றது.
இந்த கண்காட்சியை பார்வையிட சென்றவர்களின் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில், எரிந்த நிலையில் புற்தரையில் போடப்பட்ட சிகரட் துண்டொன்றிலிருந்து தீ பரவியுள்ளது.
அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் எரிய ஆரம்பித்து சுமார் 20 முதல் 30 கார்கள் மற்றும் துவிச்சக்கரவண்டிகள் ஆகியன தீக்கிரையாகியுள்ளன.
தீ ஏனைய கார்களுக்கும் பரவியதில் 300-இற்கும் அதிகமான கார்கள் எரிந்துள்ளன.
தீ விபத்தினால் கண்காட்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.