சிகரெட் இற்கு மாற்றீடாக மது அருந்துமாறு சுற்றுலா அமைச்சர் ஆலோசனை.

சிகரெட் விலை அதிகம் என்றால் மதுபானம் அருந்துங்கள் என சுற்றுலா அமைச்சர்  ஜோன்அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் சிகரெட் வலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிகரெட் பிடிப்பதற்கு அவசியம் இல்லை என்றும், அதற்கு பதிலாக மது கொஞ்சம் அருந்துவது நன்மை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.